உலகளவில் அதிகம் பயன்படுத்தும் மொபைல் செயலி எதுவென்றால் அது வாட்ஸ்ஆப் தான். காலை எழுந்ததும் Good Morning இல் இருந்து இரவு தூங்க செல்லும் முன் Good Night வரை எல்லா வகையான உரையாடல் செய்திகளையும் உலகின் எந்த மூலையில் இருந்தும் மற்றொருவருக்கு நொடிப்பொழுதில் உடனுக்குடன் அனுப்ப இயலும். மேலும் உரையாடல் செய்திகள் மட்டுமில்லாது எண்ணற்ற புகைப்படங்கள்,வீடியோக்களும் அனுப்ப இயலும். ஒரு வேலை நாம் வேற மொபைல் வாங்கி விட்டால் பழைய மொபைல் வாட்சப்பில் உள்ள முக்கியமான செய்திகள் புகைப்படம் வீடியோக்கள் அழிந்துவிடும் விடும். அவைகள் அழியாமல் இருக்க நாம் Chat BackUp எடுத்து வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் எத்தனை மொபைல் மாற்றினாலும் நம்முடைய வாட்சப்பில் உள்ள முக்கியமான செய்திகள் புகைப்படம் வீடியோக்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். இனி எவ்வாறு Chat BackUp எடுக்க வேண்டும் என்பதை பாப்போம்!
- உங்கள் மொபைலில் உள்ள Whatsapp செயலியை ஓபன் செய்து கொள்ளவும்.
- இப்போது வலது பக்க மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.
- அதில் Setting என்ற விருப்பத்தை தேர்வு செய்து அதில் உள்ள Chats என்ற option னைக் கிளிக் செய்யவும்.
- இப்போது கீழே ஸ்க்ரோல் செய்தால் Chat Backup என்ற Option னைக் கிளிக் செய்தால் போதும்.உங்கள் வாட்ஸ்ஆப் history BackUp ஆகி விடும்.
No comments:
Post a Comment