பருவ காலங்களில் கோடைகாலம் என்பது மிகவும் வெயில் சுட்டரிக்கும் காலமாகும். இந்த காலத்தில் நமது உடல் மற்றும் சுற்றுப்புற சூழல் சார்ந்த பல மாற்றங்கள் நிகழும். இந்நிலையில் நமது வாழ்வியல் மற்றும் உணவு முறைகளில் சில பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டால் வெயிலின் அதீத தாக்கத்தில் இருந்து நம்மைக் காத்துகொள்ளலாம்.அவை என்னென்ன என்பதை பார்ப்போம்!
- நாம் வழக்கமாக உண்ணும் உணவுகளில் அதிகம் காரம் மற்றும் எண்ணையில் பொறித்த உணவுகளை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.
- காலை வேளையில், இரவு மிஞ்சிய சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து சிறிது உப்பு சேர்த்து பருகவும்.
- மதிய உணவுகளுடன் தயிர், மோர் சேர்த்தல் நல்லது.
- பருவகாலங்களில் கிடைக்கும் பழம் மற்றும் காய்கறிகளை சேர்க்க வேண்டும். உதாரணமாக, கோடையில் இளநீர்,நுங்கு,பதநீர்,வெள்ளரிக்காய்,சுரக்காய்,மாம்பழம்,தண்ணீர் பழம்.
- வெயில் காலங்களில் உடலில் நீரிழப்பு என்பது அதிகம் காணப்படும். எனவே சரியான நேரத்தில் அடிக்கொரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையென்றால் நா வறட்சி, உடற்சோர்வு,மயக்கம்,அஜீரணம்,செரிமானக் கோளாறு,மற்றும் பல சருமப் பிரச்சனைகளும் ஏற்படும்.
- கடைகளில் விற்கக் கூடிய துரித உணவுகளை தவிர்ப்பது நலம்.
- வெயில் காலங்களில் டீ,காபி யைத் தவிர்த்து, கரும்புச் சாறு, சர்பத்,எலுமிச்சை பழச் சாறு , கிர்னி பழச்சாறு ( முழாம்பழம்) போன்ற பழச்சாறுகளை அருந்தலாம்.
- காலை, மாலை இரு வேளைகளிலும் குளிப்பது நலம். இதனால் நம் உடல் சூடு குறையும்.
- தண்ணீர் அருந்தும் போது சிறிது வெந்தயத்தை சேர்த்து அருந்தலாம்.
- சருமப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க பப்பாளி,பீட்ரூட் ,கேரட் சாறுகள் அருந்தலாம். ஓய்வு நேரங்களில் பயத்த மாவு,கடலை மாவு,தக்காளி,சிறிது மஞ்சள் சேர்த்து பேஸ்பேக் தயார் செய்து போடலாம்
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்....
No comments:
Post a Comment