இனி வீட்டில் இருந்து கொண்டே தட்டச்சு (Typing) படிக்கலாம்! | Tux Typing | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Sunday, April 28, 2024

இனி வீட்டில் இருந்து கொண்டே தட்டச்சு (Typing) படிக்கலாம்! | Tux Typing | Techinfo





பொதுவாகவே பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்கள் அல்லது அலுவல் நிமித்தம் வேலை செய்பவர்கள் தங்களுடைய மடிக்கணினியையோ  அல்லது PC யையோ பயன்படுத்துவர். இவ்வாறு பயன்படுத்தும் போது அவற்றின் keyboard டை வேகமாக பயன்படுத்த தெரிந்தால் மட்டுமே கணினியில்  நாம் செய்யகூடிய வேலைகள் துரிதமாக நடைபெறும். அது தெரியாமல் Keyboardஇல் ஒவ்வொரு Letters ஐயும் தேடி தேடி டைப் செய்தால் வீண் நேர விரயம் ஆகும். இதற்காக  Typing கற்பதற்காக Typing Institute தான் செல்ல வேண்டும் என எந்தவொரு கட்டாயமும் கிடையாது.  உங்கள் கணினியிலே இலவசமாக Typing கற்றுக்கொள்ள இயலும். 



அதற்காக Tux Typing என்ற ஒரு சாப்ட்வேர் உள்ளது. இதை நாம் பயன்படுத்தும் முறையும் மிக எளிது. அதாவது இதில் நீங்கள் Typing யை  ஒரு கேம் விளையாடுவது போல் விளையாடி கற்றுக்கொள்ள முடியும். இந்த விளையாட்டில் முதலில் Keyboardஇல் விரல்களை எந்தெந்த லெட்டர்ஸில் வைத்து பயன்படுத்த வேண்டும் என்ற introduction உங்களுக்கு கொடுக்கப்படும். 



பின் எளிமையான வாங்கியங்கள் வானத்தில் இருந்து மீன் மழையாக வரும் அந்த வார்த்தைகளை நாம் சரியாக  Keyboardஇல் அதற்குரிய  விரல்களை பயன்படுத்தி  டைப் செய்ததும்  கீழே உள்ள பெண்குயின் அந்த மீனை விழுங்கி விடும். இதில் விளையாட்டில்  பல படிநிலைகள் உள்ளன. அவற்றை முழுதாக முடித்து விட்டால் நம்முடைய typing வேகம் அதிகரிக்கும்.இவ்வாறு நமக்கு கிடைக்கும் ஓய்வு வேளைகளில் கூட இந்த விளையாட்டை விளையாடுவதன் மூலம் எளிதாக தட்டச்சு பழக இயலும். இதை குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தால் அவர்களும் ஆர்வத்துடன் விளையாண்டு தட்டச்சும் கற்றுக்கொள்வார்கள்.

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்....

No comments:

Post a Comment