நம்முடைய முக்கியமான ஆவணங்களான பள்ளி வகுப்பு மதிப்பெண் பட்டியல் , ஆதார் அட்டை, வோட்டர் ஐடி போன்றவைகளை அசல் ஆவணங்களாக நம்முடைய மொபைலிலே பத்திரமாக சேமித்து கொள்ளலாம். Digi Locker என்ற செயலி மூலமாக நம்முடைய அத்தியாவசிய ஆவணங்களை மொபைல் மூலமாக எப்பொழுது வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இது இந்திய அரசாங்கம் உருவாக்கிய செயலி. இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
- உங்களுடைய மொபைலில் ப்ளே ஸ்டோர்க்குள் சென்று Digi Locker செயலியை பதிவிறக்கிக் கொள்ளவும்.
- ஓபன் செய்ததும் உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து Register செய்யவும்.
- இப்போது உங்கள் பெயர், பிறந்த தேதி , ஆதார் எண் போன்ற தகவல்களை வழங்குவதன் மூலம் Digi Locker இல் கணக்கைத் துவங்கலாம்.
- இப்போது login செய்ததும் Issued Documents என்ற option னைக் கிளிக் செய்யவும்.
- அதில் Issuver என்ற option னில் பல வகையான documents காண்பிக்கும். அதில் நீங்கள் எந்த ஆவணத்தை டவுன்லோட் செய்ய வேண்டுமோ அதை செலக்ட் செய்து அந்த ஆவணம் பற்றிய விவரங்களை கொடுத்தால் அதன் அசல் டவுன்லோட் ஆகி விடும்
No comments:
Post a Comment