வாக்காளர் அட்டை இல்லாமலே வாக்களிக்கலாம் ! தேர்தல் ஆணையம் அறிவிப்பு ! | Election Commission Notification | NVSP | Tech info - Brothers Media

Breaking

Follow us on Facebook

Friday, April 5, 2024

வாக்காளர் அட்டை இல்லாமலே வாக்களிக்கலாம் ! தேர்தல் ஆணையம் அறிவிப்பு ! | Election Commission Notification | NVSP | Tech info



வாக்குரிமை என்பது ஜனநாயக கடமைகளில் முக்கியமானதொன்றாகும். வருகின்ற  மக்களவை தேர்தலில் ஓட்டுரிமை பெற்ற அனைவரும் தவறாது வாக்களிக்க  வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. வாக்களிப்பதற்கு அடையாள ஆவணமாக வாக்காளர் அட்டையை பயன்படுத்துவோம். ஆனால் ஓட்டுரிமை பெற்ற வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் 12  விதமான ஆவணங்களை காண்பித்தும் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் எந்தவொரு வாக்காளரின்  ஜனநாயக உரிமையும் மறுக்கப்படகூடாது என்பதே தேர்தல் ஆணையத்தின் முக்கிய நோக்கமாகும்.

தேர்தல் ஆணையம் அறிவித்த பன்னிரெண்டு ஆவணங்கள் பின்வருமாறு
  1. ஆதார் அட்டை
  2. ரேஷன் அட்டை
  3. ஓட்டுனர் உரிமம்
  4. பான் கார்டு
  5. வங்கி கணக்கு புத்தகம்
  6. பாஸ்போர்ட்
  7. அரசின் மூலம் அங்கீகாரம் பெற்ற மாற்றுத்திறனாளி சான்றிதழ் 
  8. மத்திய அரசின் வேலை வாய்ப்பு அடையாள அட்டை
  9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய  சான்றிதழ் 
  10. எம்.பி.,எம்.எல்.ஏ,எம்.எல்.சி அதிகாரபூர்வ அடையாள அட்டை
  11. மத்திய,மாநில அரசு ஊழியர் அடையாள அட்டை 
  12. தொழிலாளர் அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு அட்டை 
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..

No comments:

Post a Comment