இன்று கம்ப்யூட்டர் மற்றும் மொபைலில் வேலை செய்பவர்கள் அதிகம் ஆகிவிட்டனர். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் ஆன்லைன் மூலமாகவே படிக்கும் வசதியும் அதிகமாகி விட்டன. இதன் மூலம் கணினி மற்றும் மொபைல் பயன்படுத்தும் விகிதமும் அதிகரிக்கிறது. இதன் மூலம் கண்கள் சம்பந்தப்பட்ட தொற்று நோய்கள் அதிகமாகின்றன. இது தவிர்க்க இயலாதது தான். ஆனால் அவை வராமல் எவ்வாறு தடுக்கலாம் என்பதை பார்க்கலாம்.
- முடிந்தவரை ஸ்க்ரீன் பார்க்கும் நேரத்தை குறைக்கவும். அதாவது தேவையான நேரங்களில் மட்டும் கணினி மற்றும் மொபைலை பயன்படுத்தவும்.
- ஸ்க்ரீன் அதிக நேரம் பார்க்க நேர்ந்தால் அதற்கென ப்ரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கண் கண்ணாடியை பயன்படுத்தவும்.இதன் மூலம் மொபைல் மற்றும் கணினியிலிருந்து வரக்கூடிய நீல நிறக் கதிர்கலிலிருந்து நம் கண்களை பாதுகாக்கிறது.
- 20-20-20 பார்முலாவை பயன்படுத்தவும். அதாவது 20 வது நிமிடங்களுக்கு ஒரு முறை 20 அடிக்கு அப்பால் உள்ள பொருளை 20 வினாடிகள் பார்க்க வேண்டும். இந்த பயிற்சியை செய்வதன் மூலம் கண்கள் தசை கொஞ்சம் தளர்வு கொடுக்கும்.
- நீங்கள் பயன்படுத்தும் கணினி மற்றும் மொபைலில் Screen Filter யை பயன்படுத்தவும்.இவை உங்கள் கண்களுக்கு இதமான வெளிச்சத்தை கொடுக்கும். முடிந்தவரை அதிக Brightness சில் வேலை பார்ப்பதை தவிர்க்கவும்.
தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment