மெயில் ஐடி ஓபன் செய்ய தெரியவில்லையா? இந்த பதிவு உங்களுக்கு தான்...| Gmail Account Create | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Wednesday, April 24, 2024

மெயில் ஐடி ஓபன் செய்ய தெரியவில்லையா? இந்த பதிவு உங்களுக்கு தான்...| Gmail Account Create | Techinfo

கூகிள் மெயில் அக்கௌன்ட் என்பது ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்தும் அனைவரும் கண்டிப்பாக ஓபன் செய்திருக்க வேண்டும். இந்த அக்கௌன்ட் இருந்தால் தான்  கூகிள் சார்ந்த எந்த ஒரு Application மற்றும் வலைதளங்களை பயன்படுத்த கூகிள் அனுமதிக்கும்.  இந்த மெயில் கணக்கை எவ்வாறு உருவாகுவது என்பதை பற்றி பார்ப்போம்! 

  • முதலில் ப்ளே ஸ்டோருக்குச் சென்று Gmail App யை இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
  • பின் அந்த app யை ஓபன் செய்யவும். அதில் Create account என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்களுக்கு For Myself , For My Child,To Manage My Bussiness என 3 Options காண்பிக்கும். அதில்  For Myself என்பதை கிளிக் செய்யவும்.
  • அடுத்து Firstname மற்றும்  LastName என்ற  இடத்தில் உங்கள் பெயரை குறிப்பிடவும். 
  • கீழே Username என்ற கட்டத்தில் உங்கள் மெயில் எந்த மாதிரியான வடிவில் வேண்டுமோ அதை டைப் செய்யவும்.  ( உதாரணமாக.,உங்கள் பெயர் Murgan என்றால் மெயில் username இல் muru2024@gmail.com / murugan1989@gmail.com என டைப் செய்து கொள்ளலாம்.)
  • பின் கீழே Password என்ற கட்டத்தில்  நீங்கள் விரும்பும் password கொடுத்து மீண்டும் Confirm Password கொடுத்து Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்கள் மொபைல் எண்ணை enter செய்தால் மொபைலுக்கு ஒரு Verify Code வரும் அதை enter செய்து Verify என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து பிறந்த தேதி மற்றும் பாலினத்தை select செய்து Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது Yes Im in என்ற பட்டனைக் கிளிக் செய்து அங்கு கேட்கக்கூடிய  Terms & Conditions யை I agree என்ற பட்டனைக் கிளிக் செய்தால் உங்கள் மெயில் ஐடி create ஆகி விடும். பின் இந்த மெயில் ஐடியை தேவைப்படும்  இடங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்....


No comments:

Post a Comment