Gpay வில் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளை add செய்வது எப்படி? | How to Add Bank Account In Gpay ? | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Tuesday, April 23, 2024

Gpay வில் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளை add செய்வது எப்படி? | How to Add Bank Account In Gpay ? | Techinfo

Gpay என்பது உலகளாவிய மக்கள் பயன்படுத்தும் ஒரு பணப்பரிவர்த்தனை செயலி ஆகும். இதன்மூலம் நாம் எங்கிருந்து கொண்டும் நம்முடைய வங்கி கணக்கில் இருந்து மற்றொருவருக்கு பணத்தை வங்கிக்கு செல்லாமலே அனுப்ப இயலும். இதன் மூலம் நம்முடைய நேரம் விரயமாவதும் தவிர்க்கப்படும். மேலும் அவசர தேவைக்கு இதன் மூலம் பணம் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த Gpay பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களுடைய ஒரே Gpay கணக்கிலே பல வங்கி கணக்குகளை add செய்து கொள்ளலாம். மேலும் உங்களின் ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பணத்தையும் Transfer செய்ய இயலும்.  இவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் எவ்வாறு gpay யில் add செய்வது என்றும் அவ்வாறு Add செய்த ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக்கு எவ்வாறு பணம் அனுப்புவது என்பதை பார்போம்!

  • உங்களது Gpay செயலியை மொபைலில் ஓபன் செய்யவும்.
  • இப்போது வலது பக்க மூலையில் உள்ள உங்கள் profile icon னைக் கிளிக் செய்யவும்.
  • அதில் Add Bank Account என்ற option னைக் கிளிக் செய்து நீங்கள் எந்த வங்கி கணக்கை Add செய்ய வேண்டுமோ அந்த வங்கியைக் select செய்து உங்கள் வங்கி கணக்கு எண்ணை கொடுத்து Add செய்து கொள்ளலாம். இதில் கவனிக்க வேண்டியது நீங்கள் Add செய்யும் வங்கி கணக்கிலும் உங்களது Gpay எண்ணும் ஒரே எண்ணாக இருத்தல் வேண்டும்.
ஒரே Gpay அக்கௌன்டில் உள்ள ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு எவ்வாறு பணம் அனுப்புவது எப்படி ?

  •  இப்போது உங்கள் Gpayசெயலியில் முகப்பு பக்கத்திற்குச் செல்லவும்.
  • அதில் Self Transfer என்ற option னை select செய்து From இல் நீங்கள் எந்த வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்ப வேண்டுமோ அந்த வங்கியை select செய்ய வேண்டும். அதே போல் To வில் எந்த வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அந்த வங்கி கணக்கை தேர்வு செய்யவும்.
  • இப்போது எவ்வளவு தொகை அனுப்ப வேண்டுமோ அதை enter செய்து pay செய்துகொள்ளலாம்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..

No comments:

Post a Comment