ஒவ்வொரு வீட்டிலும் மின் இணைப்பு என்பது அத்தியாவசிய தேவை ஆகிறது. தற்போது மின் இணைப்பு வாரியம் ஒவ்வொரு வீட்டின் மின் இணைப்பு எண்ணுடன் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது. இதற்காக மின் இணைப்பு வாரியத்தில் இருந்தே பணியாளர்கள் ஒவ்வொரு வீடு தோறும் வந்து ஆன்லைன் மூலமாக மின் இணைப்பு எண் மற்றும் ஆதாரை இணைத்து கொடுத்தார்கள். இதிலும் விடுபட்ட நபர்கள் எவ்வாறு ஆன்லைலில் இணைக்கலாம் என்பதைப் பார்க்கலாம்!
- கீழே உள்ள EB Aadhaar Link என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது ஓபன் ஆகும் பக்கத்தில் உங்கள் மின் இணைப்பு எண் மற்றும் அதனுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை டைப் செய்து கீழே இருக்க கூடிய captcha வை டைப் செய்து Enter என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் மின் இணைப்பு எண்னைக் கொடுத்து நீங்கள் வீட்டின் உரிமையாளரா/வடைக்கைக்கு உள்ளவரா போன்ற விவரங்கள் கேட்கும் அவற்றை select செய்யவும்.
- இப்போது உங்கள் ஆதார் எண்ணை டைப் செய்து Get OTP யைக் கொடுத்தால் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP enter செய்தால் போதும் உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும்.
EB Aadhaar Link
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்....
No comments:
Post a Comment