முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் - முழு விளக்கம்! | First Graduate Certificate Certificate Apply - Full Detail | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Wednesday, May 15, 2024

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் - முழு விளக்கம்! | First Graduate Certificate Certificate Apply - Full Detail | Techinfo


சமீபத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு  பரீட்சை முடிவுகள் வெளியாகியது. அதில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்து கல்லூரியில் சேர்வதற்கான அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வார்கள். இவ்வாறு தங்களது குடும்பத்தில் இருந்து முதல் முறையாக கல்லூரி சென்று பட்டம் படிக்க செல்லும் மாணவர்களை தான் முதல் தலைமுறை பட்டதாரி என்பர். இவர்களுக்கு கல்லூரி படிப்பு படிப்பதற்காக அரசே பல்வேறு சலுகைகள் வழங்குகின்றது. இதனை பெற வேண்டும் என்றால் அந்த மாணவர்கள் "முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்" வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.  இதனை நீங்களே விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இதனை எவ்வாறு விண்ணபிக்கலாம் என்பதை பாப்போம்! 

 தகுதிகள் : 

  • குடும்பத்தில் யாரேனும் பட்ட படிப்பு படித்திருக்க கூடாது.அதாவது மாணவரின் தாய் தந்தை, அவர்களின் பெற்றோர்கள் ( தாத்தா,பாட்டி) , உடன்பிறந்தவர்கள் யாரும் பட்ட படிப்பு படித்திருக்க கூடாது.
  • விண்ணப்பிக்கும் மாணவர் கட்டாயம் ஏதேனும் ஒரு பட்ட படிப்பு  எடுத்து படிக்க வேண்டும்.
  • குடும்பத்தில் மூத்த சகோதரன் அல்லது சகோதரி படிக்காமல் இளைய சகோதரன் அல்லது சகோதரி பட்ட படிப்பு படித்தாலும் அவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள் :

  • மாணவரின் புகைப்படம் 
  • ஆதார் அட்டை
  • ஸ்மார்ட் கார்டு
  • கல்லூரியில் சேர்ந்ததற்கான கட்டண ரசீது அல்லது படிப்பு சான்றிதழ்
  • தாய்,தந்தை, அவர்களின் பெற்றோர்கள் ( தாத்தா,பாட்டி) , மற்றும் உடன்பிறந்தவர்கள் யாரேனும் படித்திருந்தால் அதாவது1 முதல் 12 ஆம் வகுப்பு , டிப்ளோமா படித்திருந்தால் அதற்கான சான்றிதழ் படித்துக் கொண்டிருந்தால் அவர்களின் படிப்பு சான்றிதழ்  

எவ்வாறு விண்ணபிப்பது ?

  • கீழே உள்ள First Graduate Certificate Apply என்ற link யைக் கிளிக் செய்து உள் செல்க.
  • ஓபன் ஆகக்கூடிய பேஜ்ல் பயனாளர் உள்நுழைவு / Citizen Login என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுக்கென்று ஒரு கணக்கை உருவாக்கி கொள்ளவும்.
  • Account create செய்த பின் உங்களுடைய Username மற்றும் password டை கொடுத்து கீழே உள்ள Captcha வை சரியாக டைப் செய்து login செய்து கொள்ளவும்.
  • உள் சென்றதும் Service Wise என்ற Option னைக் கிளிக் செய்து அங்குள்ள search boxஇல் First Graduate  என டைப் செய்யவும்.
  • இப்போது First Graduate Certificate  என்ற option னைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது மீண்டும் Sumbit கொடுக்கவும்.
  • அதில் can number என்ற பாக்ஸை கிளிக் செய்து ,ஆதார் நம்பரை டைப் செய்து ,பிறந்ததேதி-யை டைப் செய்து ,மொபைல் நம்பர் போட்டு OTP -யை sent பண்ண வேண்டும் .
  • OTP போட்டதும்  Proceed என்ற  பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
  • இதை கிளிக் செய்ததும் ஒரு application form ஓபன் ஆகும் .
  • அதில் கேட்கக்கூடிய உங்கள் குடும்ப உறுப்பினர்களின்விவரங்களை சரியாக நிரப்பவும்.  
  • இறுதியில் நீங்கள் தேர்ச்சி பெற்ற வருடம் , படித்த அல்லது படிகின்ற கல்லூரி நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி யைக் கொடுத்து submit கொடுக்கவும்.
  • இப்போது அங்கு கேட்கக் கூடிய Documents யை upload செய்து Make Payment என்ற பட்டனைக் கிளிக் செய்து ரூ.60 கட்டணத்தை செலுத்தினால்  விண்ணப்பம் செய்ததற்கான ஒப்புகைச் சீட்டு வரும்.
  • அந்த விண்ணப்ப எண்ணை வைத்து status செக் செய்து கொள்ளவும்.

First Graduate Certificate Apply

செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்....


No comments:

Post a Comment