தமிழக அரசு பெண் குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் ஒரு குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லாமல் பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் அவர்களுக்கென்று தமிழக அரசு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மூலம் பெண் குழந்தைகளின் பெயரின் ரு.50,000 வைப்பு தொகையை குழந்தையின் பெயரில் செலுத்துகிறது. மேலும் கல்வி உதவிதொகையும் வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய வேண்டுமானால் ஆண் வாரிசு இல்லை என்ற ஒரு சான்றிதழ் வாங்க வேண்டும்,. அதனை நாம் ஆன்லைன் மூலமாகவே apply செய்துகொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்;
- பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் இருக்குமாறு ஒரு புகைப்படம்.
- பெற்றோர் மற்றும் குழந்தைகளின் ஆதார்
- குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்
- பெற்றோரின் கருத்தடை சான்றிதழ்
- குடும்ப அட்டை
- கீழே உள்ள No Male Child Certificate Apply என்ற link யைக் கிளிக் செய்து உள் செல்லவும்.
- ஓபன் ஆகக்கூடிய பேஜ்ல் பயனாளர் உள்நுழைவு / Citizen Login என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுக்கென்று ஒரு கணக்கை உருவாக்கி கொள்ளவும்.
- Account create செய்த பின் உங்களுடைய Username மற்றும் password டை கொடுத்து கீழே உள்ள Captcha வை சரியாக டைப் செய்து login செய்து கொள்ளவும்.
- உள் சென்றதும் Service Wise என்ற Option னைக் கிளிக் செய்து அங்குள்ள search boxஇல் Incom என டைப் செய்யவும் .
- இப்போது No Male Certifictae என்ற option னைக் கிளிக் செய்யவும்.
- ஓபன் ஆகும் பேஜ்ல் தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டண ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கும். கீழே உள்ள Proceed என்ற பட்டனைக் கிளிக் செய்து உள் செல்லவும்.
- இங்கு திரையில் தெரியக்கூடிய கட்டங்களில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்து CAN நம்பரை கண்டுபிடிக்க வேண்டும். உதாரணமாக உங்களுடைய ஆதார் நம்பரை டைப் செய்து search என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். உங்களுக்கு CAN நம்பர் இருந்தால் கீழே காண்பிக்கும் அதை கிளிக் செய்து உங்களுடைய பிறந்ததேதி கொடுத்து Get OTP என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTPயை டைப் செய்து Confirm OTP என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
- CAN நம்பர் வரவில்லை என்றால் மேலே உள்ள register can என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுகென்று ஒரு can நம்பரை உருவாக்கி கொள்ளவும் .
- இப்போது Confirm OTP கொடுத்த பின் உள் செல்லும் பக்கத்தில் உங்களுடைய CAN நம்பரில் register செய்த விவரங்கள் காண்பிக்கும்.
- இப்போது அங்கு கேட்ககொட்டிய விவரங்களை பூர்த்தி செய்து submit செய்து Documents upload செய்த பின் 60ரூபாய் கட்டணம் செலுத்தினால் வரு ம் Acknowledgement Number வைத்து status செக் செய்து கொள்ளலாம்.
- approve ஆகிய பின் certificate டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment