உங்கள் மொபைலில் ஸ்டோரேஜ் நிரம்பி விட்டதா? இப்படி பண்ணுங்க! | Storage Clean Up Solution | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Friday, May 3, 2024

உங்கள் மொபைலில் ஸ்டோரேஜ் நிரம்பி விட்டதா? இப்படி பண்ணுங்க! | Storage Clean Up Solution | Techinfo


மொபைல்  பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதிலும் பள்ளி கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு சார்ந்த நிறைய pdf கள், கோப்புகள் இருக்கும். மேலும் மொபைலில் தேவையில்லாத Data க்கள்  அதிகம் தங்கிவிடுவதால் நமக்கு தேவையான ஒரு file யை டவுன்லோட் செய்யும்போது அவை டவுன்லோட் ஆகாமல் Storage "Storage Space is Running Out" என பாப் அப் மெசேஜ் வரும். இவ்வாறு வரக்கூடிய பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்வது என்பதை பாப்போம்!

படி-1

  • உங்கள் மொபைலில் " i  Manager" என்ற ஆப்பை ஓபன் செய்யவும்.
  • அதில் Storage என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
  • பின் அதில் Clean Up என்ற ஆப்சனை தேர்வு செய்து அதில் உங்களுக்கு தேவை இல்லாத அதிகம் பயன்பாட்டில் இல்லாத அப்ளிகேஷனை செலக்ட் செய்து Delete செய்யவும்.
படி-2
  • உங்கள் மொபைலில் Files க்குள் செல்லவும்.
  • அதில் Storage என்ற option இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
  • பின் அதில் Device Storage மற்றும் SD Card (நீங்கள் மெமரி கார்டு போட்டு இருந்தால்) என்று இரண்டு விருப்பங்கள் கேட்கும். 
  • அதில் Device Storage இல் தேவையில்லாத கோப்புகள் அதிகம் இருப்பின் அதையும் delete செய்யவும். 
படி-3 
  • உங்களுக்கு முக்கியமான file  ஏதும் அதிகமான இடத்தை ஆக்கிரமித்து இருந்தால் அதே Files இல் Device Storage இல் சென்று அந்த File யை செலக்ட் செய்து Move To SD Card என்ற option னை தேர்வு செய்து அந்த கோப்பை SD Card Storage ற்கு மாற்றிக் கொள்ளலாம்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்....

No comments:

Post a Comment