நலவாரிய அட்டை மூலம் மாதம் ரூ.1200 பென்ஷன் வாங்கலாம் ! முழு விளக்கம் | Nalavariyam Pension Apply In Online Full details | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Wednesday, June 12, 2024

நலவாரிய அட்டை மூலம் மாதம் ரூ.1200 பென்ஷன் வாங்கலாம் ! முழு விளக்கம் | Nalavariyam Pension Apply In Online Full details | Techinfo

நீங்கள்  நலவாரிய அட்டை வைத்திருந்தால் உங்களுக்கு பென்சன் தொகையாக  ரூ 1200கிடைக்கும் .உங்களுக்கு 60வயது ஆனதும் இந்த உதவித்தொகை உங்களுக்கு கிடைக்கும் .இதை எப்படி appley பண்ணுவது என்பதை பற்றி கீழே பார்க்கலாம் .

பென்சனுக்கு தேவையான ஆவணங்கள் :

  1. ஆதார் 
  2.  ஸ்மார்ட் கார்டு 
  3. பேங்க் புக்  
  4. பேங்க் புக்கில் பதிவு செய்யப்பட்ட கடைசி பக்கம்
  5. நலவாரிய அட்டை 
  6. புகைப்படம் 
மேலே கொடுக்கப்பட்ட அணைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து 500KB-க்குள் "PDF" -ல் சேமித்து வைத்து கொள்ளுங்கள். பின்பு கீழே கொடுக்கப்பட்ட விதிமுறைகளின் படி சரியாக பதிவிடுங்கள்.

பென்ஷனுக்கு apply செய்வதில் இரண்டு வகைகள் உள்ளது.
  1. பழைய நலவாரிய புத்தகம் வைத்திருப்பவர்களுக்கு விண்ணபிப்பது 
  2. டிஜிட்டல் நலவாரிய அட்டை வைத்திருப்பவர்களுக்கு விண்ணபிப்பது

பழைய நலவாரிய புத்தகம் வைத்திருப்பவர்களுக்கு பென்சனுக்கு எப்படி விண்ணப்பிப்பது? 
 
  • கீழே உள்ள Pension Apply New   லிங்கை கிளிக் செய்ய வேண்டும். 
  • ஓபன் ஆகும் பக்கத்தில் உங்கள் பதிவு எண் மற்றும் paasword கொடுத்து பிறகு "LOGIN" என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
  • லாகின் ஆனதும் மேலே இருக்கும் "CLAIM" என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .அதில் "Pension" என்ற option னைக்  கிளிக் செய்ய வேண்டும்
  • பிறகு ஓபன் ஆகும் படிவத்தில்  கேட்கும் விவரங்களை  நிரப்ப வேண்டும்.
  • அதில் கேட்கும் அனைத்து ஆவணங்ககளையும் upload  செய்யவேண்டும் .
  • கடைசியாக ஒரு லைவ் போட்டோ எடுக்க வேண்டும்,.
  • இப்போ "SUBMIT" என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும் "PREVIEW" வரும்.
  • இதில் தவறாக ஏதாவது பதிவு செய்து இருந்தால் "Previous" என்ற கிளிக் செய்து தவறானதை திருத்தி மீண்டும் பதிவு செய்து கொள்ளலாம். 
  • சரியாக இருந்தால் "SUBMIT" என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும்
  •  இப்போது உங்களுக்கு ஒரு விண்ணப்ப எண் வரும் .அதை வைத்து நீங்கள் விண்ணப்பத்தின் நிலையை எப்போது வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம்.
  • உங்களது விண்ணப்பம் ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் உங்கள் மொபைல் நம்பருக்கும் SMS வரும் வந்தவுடன். உங்களுக்கு மாதமாதம் ரூ 1000 பென்சன் கிடைத்து விடும்.

டிஜிட்டல் நலவாரிய அட்டை வைத்திருப்பவர்களுக்கு
 பென்சனுக்கு எப்படி விண்ணப்பிப்பது? 

  • கட்டுமான தொழிலாளர்கள் அட்டை வைத்திருந்தால் கீழே உள்ள Pension Apply For Construction Card என்ற link கைக் கிளிக் செய்யவும்.
  • ஓட்டுனர் தொழிலாளர்கள் அட்டை வைத்திருந்தால் கீழே உள்ள Pension  For Driver என்ற link கைக் கிளிக் செய்யவும். 
  • தவிர்த்து மற்ற தொழிலாளர் அட்டை வைத்திருந்தால் கீழே உள்ள Others Pension என்ற லிங்கைக் கிளிக் செய்யவும். 

Pension Apply New

Pension Apply For Construction Card

Pension For Driver

Others Pension

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..


No comments:

Post a Comment