அரசு 2024-2025 ற்கான நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கை பட்ஜெட்டை தற்போது அறிவித்தது. அதில் " குடிசைகள் இல்லா தமிழகம் " என்ற இலக்கில் "கலைஞர் கனவு இல்லம்" எனும் திட்டத்தின் மூலம் 2030 குள் சுமார் 80 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது. இதன் ஆரம்பமாக இந்த ஆண்டிலே இதற்கான அடிக்கல் நாட்டப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதன் மூலம் வீடு இல்லாத மக்களுக்கு கான்க்ரீட் தளம் அமைத்த வீடு கட்டிதரப்படவுள்ளது . இதில் கிராம பகுதியில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். வீடு கட்டுவதற்கு நிலம் இல்லாவிட்டாலும் அதையும் அரசே வழங்கி கட்டிதரவுள்ளது. இதற்காக ஒரு வீடு கட்டுவதற்கு சுமார் 3.5 லட்சம் முழு தொகையை அரசே வழங்குகிறது. இந்த கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் நீங்கள் விண்ணப்பம் செய்ய வேண்டுமென்றால் உங்கள் ஊரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நேரடியாக சென்று தெளிவாக இதன் விவரங்களை அரிய இயலும். மேலும் வரும் காலத்தில் இதற்கான விண்ணப்பங்களையும் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் வாயிலாகத்தான் விண்ணப்பிக்க இயலும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் :
- ஆதார் அட்டை
- குடும்ப அட்டை
- புகைப்படம்
- சாதி சான்றிதழ்
- வருமான சான்றிதழ்
- மின்னஞ்சல் முகவரி
- கைப்பேசி எண்
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்....
No comments:
Post a Comment